ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி 
சினிமா

’காந்தாரா’ வெற்றிக்கு கன்னட ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

காமதேனு

சமீப காலமாக கன்னடத் திரைப்படங்களின் முகம் மாறி வருகிறது. அந்த வகையில், பான் இந்தியா என்ற சொல்லுக்கு வலுசேர்த்த கன்னடத் திரைப்படமான ‘கே.ஜி.எஃப்’-ஐ தொடர்ந்து அடுத்து ‘காந்தாரா’ கவனம் பெற்றிருக்கிறது.

கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற காந்தாரா, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் தற்போதும் வெளியாகி இருக்கிறது. நடிகராக மட்டுமல்லாது, இயக்குநராகவும் இந்தப் படத்தில் தன்னுடைய தேர்ந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா’ பட வெளியீட்டின் போது சென்னை வந்திருந்தவரிடம் ‘காமதேனு’ இணையதள செய்திகளுக்காக பிரத்யேகமாகப் பேசினோம். அதிலிருந்து கொஞ்சம்.

’காந்தாரா’ படத்தில்...

“இந்தப் படத்தின் வெற்றிக்கு முதலில் கன்னட சினிமா ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் இந்தப் படத்தை மற்ற மொழிகளுக்கும் கொண்டு போய் சேர்த்தது. சின்ன வயதிலிருந்து நான் பார்த்து வளர்ந்த விஷயங்கள் எல்லாம் சேர்த்து தான் இந்தக் கதையை உருவாக்கி உள்ளேன்” என்றவரிடம், பான் இந்திய படத்துக்கான தகுதி இருந்தும் கன்னடத்தில் மட்டும் முதலில் வெளியிட்டது ஏன் என்று கேட்டோம்.

அதற்கு அவர், ”இந்த மண்ணின் கதை என்பதால் முதலில் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கன்னடத்தில் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்துதான் மற்ற மொழி பார்வையாளர்களுக்கும் இந்தப் படம் போய் சேர்ந்திருக்கிறது. நான் இன்னும் நேரடித் தமிழ்ப்படம் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. கன்னடப் படங்கள் தான் என்னுடைய முதல் தேர்வு. அங்கிருந்து மற்ற மொழிகளுக்கு எடுத்து வருகிறேன்” என்றார் சிரித்துக்கொண்டே.

SCROLL FOR NEXT