கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்  
சினிமா

’கர்மா திருப்பித் தாக்குகிறது’: கனடா பிரதமரை விளாசும் கங்கனா

காமதேனு

‘மக்கள் போராட்டம் காரணமாக, ரகசிய இடத்தில் தஞ்சமடைந்திருக்கும் கனடா பிரதமரை, கர்மா திருப்பித் தாக்குகிறது’ என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கனடா அரசும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. பொது இடங்களுக்குச் செல்பவர்கள், கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், லாரி ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்குச் செல்வதற்கும் அமெரிக்க எல்லையைக் கடப்பதற்கும் 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கனடா கட்டுப்பாடு விதித்தது.

கங்கனா, ஜஸ்டின் ட்ரூடோ

இதற்கு லாரி ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒட்டாவாவில், கடந்த வார இறுதியில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளதாக செய்தி வெளியானது.

இதையடுத்து நடிகை கங்கனா ரனாவத், கர்மாவின் சட்டம் அவரைத் திருப்பித் தாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கங்கனா, ஜஸ்டின் ட்ரூடோ

இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளதாக வந்த செய்தியை குறிப்பிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத், “கனடா பிரதமர் இந்திய போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தினார். இப்போது அவருடைய சொந்த நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டத்தால் ரகசிய இடத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். அவர் பாதுகாப்புக்கு போராட்டக்காரர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். கர்மாவின் சட்டம் அவரை திருப்பித் தாக்குகிறது” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT