கனா- ஐஸ்வர்யா ராஜேஷ்
கனா- ஐஸ்வர்யா ராஜேஷ் 
சினிமா

சீனாவில் வெளியாகும் 2-வது தமிழ்ப் படம்

காமதேனு

சிவகார்த்திகேயன் தயாரித்த ’கனா’ படம் சீனாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம், ’கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு 2018-ல் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார். சத்யராஜ், இளவரசு, தர்ஷன், ரமா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தெலுங்கிலும் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்போது இந்தத் திரைப்படம் சீன மொழியில் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர். “எங்களின் முதல் தயாரிப்பான ‘கானா’ படம் சீனாவில் சீன மொழியில் வெளியாக இருப்பது பெருமையாக இருக்கிறது” என்று சிவகார்த்திகேயன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்துக்குப் பிறகு சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT