சினிமா

அமெரிக்காவில் 3 மொழிகளில் ரிலீஸாகும் கமலின் `விக்ரம்'

காமதேனு

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள `விக்ரம்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளன. அதோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து புரமோஷன் அமர்க்களமாக நடந்து வருகிறது. அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.

மே 15-ம் தேதி இந்த படத்தின் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க வெளியீடு குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. கேஜிஃஎப் 2 படத்தை வெளியிட்ட ஏபி என்டர்டைன்மென்ட் விக்ரம் படத்தின் அமெரிக்காவில் திரையிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அங்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT