சினிமா

'விக்ரம்' முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

காமதேனு

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் வரும் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ’விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்பட பலர் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் டீஸரும், கிளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றன. படம் ஜூன் 3-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இந்தப் படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா முறையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT