சினிமா

கமலின் `விக்ரம்’ படம் பற்றி அடுத்த அப்டேட்!

காமதேனு

கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ’விக்ரம்’. இவர்களுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன், ஆன்டனி வர்கிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப் படத்தை ஜூன் 3 ஆம் தேதி வெளியிடுகிறது. படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாகத் தொடங்கி இருக்கிறது. முதற்கட்டமாக இந்தியாவின் முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வரையப்பட்டுள்ளன. விரைவில் பாடல் வெளியீடும் இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் பற்றிய அப்டேட்டை கமலின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் டிரெய்லர் மே மாதம் 18-ம் தேதி பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்தப் பட விழா, மே மாதம் 17-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT