சிம்புவுடன்  நடிக்கும் கமல்ஹாசன்?
சிம்புவுடன் நடிக்கும் கமல்ஹாசன்? சிம்புவுடன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?
சினிமா

சிம்புவுடன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?

காமதேனு

சிம்புவின் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர்.48’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா மேடையிலும் கமல்ஹாசன் இதை தெரிவித்து இருந்தார். இப்போது, இந்தப் படத்தில் சிம்புவுடன் கமல்ஹாசன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏனெனில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் சிம்பு கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதனால், கமல்ஹாசன் சிம்புவை வைத்துத் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். ’எஸ்.டி.ஆர்.48’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டு விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT