கமல்ஹாசன்
கமல்ஹாசன் 
சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

காமதேனு

சென்னையில். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்கா சென்றுவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு வார சிகிச்சைக்குப் பின், நலத்துடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், கமல்ஹாசனுக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கரோனா மற்றும் முழு உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், சோதனை முடிந்த பின் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை, அவர் 11.30 மணி அளவில் வீடு திரும்பினார்.

SCROLL FOR NEXT