சினிமா

அதுக்குள்ளேவா? லீக் ஆனது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

காமதேனு

விஜய்சேதுபதி நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம், திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. பிரபு, நடன இயக்குநர் கலா, சீமா, ரெடின் கிங்ஸ்லி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, ராம்போ எனும் கேரக்டரில் நடித்துள்ளார். சமந்தா, கதீஜா எனும் கேரக்டரிலும் நயன்தாரா, கண்மணி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் சில இணையதளங்கள் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளன. தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனதுமே திருட்டுத்தனமாக டெலிகிராம் மற்றும் டொரண்ட் உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இது படக்குழு மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT