சினிமா

`மன்மத லீலை' டைட்டில் பிரச்சினை: இயக்குநர் வெங்கட் பிரபு ஆஜராக உத்தரவு

காமதேனு

`மன்மத லீலை' படத்தின் தலைப்பு விவகாரம் தொடர்பாக நாளை ஆஜராகும்படி இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

`மாநாடு' வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மன்மத லீலை’. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 1976-ம் ஆண்டு பாலச்சந்தர்- கமல் கூட்டணியில் மன்மதலீலை என்ற தலைப்பில் உருவான படத்தை கலாகேந்திரா நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது வெங்கட் பிரபுவும் தான் இயக்கியுள்ள படத்திற்கு வெங்கட் மன்மதலீலை என்று தலைப்பு வைத்துள்ளதால் கலாகேந்திரா நிறுவனத்தின் குடும்பத்தார், படத்தின் தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாளை ஆஜராக வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT