அன்புச் செழியன்
அன்புச் செழியன் 
சினிமா

வரி ஏய்ப்பு செய்தாரா?: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனை!

காமதேனு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர் அன்புச் செழியன். இவர் 'தங்கமகன்', 'மருது', 'ஆண்டவன் கட்டளை', 'வெள்ளைக்கார துரை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்த நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், திரைப்பட பைனான்சியராகவும் இருந்து வருகிறார். மதுரை அதிமுகவிலும் பொறுப்பில் இருக்கிறார். அவர் மீது வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இன்று காலை முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்பட விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வருமான வரித்துறையினர் அன்புச் செழியன் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை 5 மணி முதலே அவர் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும், அன்புச் செழியனுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT