இளையராஜா
இளையராஜா 
சினிமா

இளையராஜாவின் 1422-வது படம் ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’

காமதேனு

இளையராஜா இசையமைக்கும் 1422-வது படத்துக்கு ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில், காதலர் தினமான, 14.02.2022 அன்று, இளையராஜாவின் 1422-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்துக்கு ’எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, கன்னட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹவுஸ் 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கிரிஷ் கதாநாயகனாகவும், மடில்டா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

லண்டனில் இருந்து இந்தியா வரும் காதலர்கள், இங்கு சில நாட்கள் வாழ்ந்தப்பிறகு, பிரிந்துவிட நினைக்கின்றனர். அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பேய்களுடன் உரையாடிய பிறகு, மீண்டும் இணையலாம் என்று முடிவெடுக்கின்றனர். அவர்கள் இணைந்தர்களா, இல்லையா என்பதை, இரு கேரக்டர்களை மட்டும் வைத்து காதல், திகில் கலந்து சொல்கிறது கதை. மே மாதம் படம் வெளியாகிறது.

SCROLL FOR NEXT