சினிமா

அஜித் படத்திற்கு அதிக கட்டணம்: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

காமதேனு

அஜித் நடித்து 2019-ல் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தின் டிக்கெட் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள `நேர்கொண்ட பார்வை' படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளனர். இந்த த்ரில்லர் திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு வெளியான அஜித்தின் `நேர்கொண்ட பார்வை' படத்துக்கு 100 ரூபாய் டிக்கெட்டை 525 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த குன்றத்தூர் பரிமளம் தியேட்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தன்னிடம் கூடுதலாக வசூலித்த பணத்தை வட்டியுடன் சேர்த்து வழங்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குன்றத்தூர் பரிமளம் தியேட்டருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் நிர்வாகத்துக்கு ஒரு எச்சரிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT