சினிமா

நடிகர் திலீப், விசாரணைக்குத் தடைவிதிக்கக் கூறுவது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

காமதேனு

‘வழக்கு விசாரணைக்கு நடிகர் திலீப் தடை விதிக்குமாறு கூறுவது ஏன்?’ என்று கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியும் விசாரணை முடிவடையவில்லை. வழக்கை இந்த மாதத்துக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீஸாரைக் கொல்ல, நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதன் விசாரணை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடந்து வருகிறது. போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை ரத்து செய்யக்கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நடிகை மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. நடிகையின் மனுவை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ‘‘ஒரு வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்த உரிமை இருக்கிறது. அந்த விசாரணைக்கு நடிகர் திலீப் தடைவிதிக்க கூறுவது ஏன்?’’ என்று கேட்ட நீதிமன்றம், திலீப்புக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

SCROLL FOR NEXT