சினிமா

`எந்த மோசமான அனுபவத்தையும் சந்திக்கவில்லை’: ஹன்சிகா

காமதேனு

``சினிமா துறையில் எந்த மோசமான அனுபவத்தையும் தான் சந்திக்கவில்லை'' என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``பிராந்திய மொழி திரைப்படங்கள் என்ற பாகுபாடு இருந்தாலும் உலகம் நம் திரைப்படங்களை ‘இந்திய சினிமா’ என்றே கருதுகிறது. இப்போது தென்னிந்திய படங்களின் குறிப்பிடத்தக்க வசூல் சாதனைக்குப் பிறகு இந்தக் காட்சி மொத்தமாக மாறியிருக்கிறது. பான் இந்தியா கலாச்சாரம் ஒரு புதிய சந்தையை திறந்திருக்கிறது.

பான் இந்தியா திரைப்படங்கள் உருவாவதற்கு முன்பே, படங்களை ரீமேக் செய்வதன் மூலம் பிராந்திய திரைப்படங்களுக்கு இடையே பரஸ்பர பரிமாற்றம் இருந்தது. ஆனால், இன்று ஒவ்வொரு பிராந்தியத்திலும் உருவாக்கப்படும் படங்களை, மக்கள் சிவப்புக் கம்பளத்தோடு ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உலக வரை படத்தில் இந்திய சினிமாவின் அந்தஸ்தை உயர்த்த இது, உண்மையில் நல்ல அறிகுறி.

ஒரு காலத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டுமே உலகப் படங்களைப் பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், கொரிய, ஜப்பானிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

ஒவ்வொரு மொழி திரைத்துறையிலும் நடிகைகளுக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் கிடைக்கின்றன. எந்தவொரு தொழிலிலும் நன்மை தீமை இரண்டுமே உண்டு. ஆனால் எனக்குத் தனிப்பட்ட முறையில் மரியாதையும், அன்பும் ஆதரவும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எந்த மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT