சினிமா

நடிகர் தனுஷின் `வாத்தி’ படம் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

காமதேனு

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

’திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகும் எனச் சொல்லப்படும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாவது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என வெளியாக இருக்கிறது. படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருக்கிறார். படத்தின் முதல் பாடலாக காதல் பாடல் வெளியாகிறது.

அதை தனுஷ் எழுதி இருக்கிறார் என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்த நிலையில் இந்த வாரம் ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகும் என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

’வாத்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT