கானா பாலா
கானா பாலா 
சினிமா

‘கானா’ பாலா தோல்வி

காமதேனு

சென்னை 72-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி அடைந்தார்.

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடந்த இந்தத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் பிரபல பின்னணி பாடகர் கானா பாலா, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர் 6-வது மண்டலம், 72-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஏற்கெனவே, அந்த வார்டில் 2006, 2011-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார். இப்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட்டார்.

கானா பாலா

“இது நான் பிறந்து வளர்ந்த பகுதி. இந்தப் பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகப் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவன் என்பதால், இந்தமுறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் 2,208 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சரவணனிடம் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் 8,303 வாக்குகளும், கானா பாலா 6,095 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலிலும் கானா பாலா 2-ம் இடம் பிடித்தார்.

SCROLL FOR NEXT