சினிமா

வெளிநாடுகளில் கெத்து காட்டும் நடிகர் விஜயின் 'வாரிசு': டிக்கெட் முன்பதிவு தீவிரம்

காமதேனு

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள 'துணிவு' படத்தை விட நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கு வெளிநாட்டில் டிக்கெட் முன்பதிவு அதிகம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு கரும்போடு சேர்ந்து சுவையூட்ட புதுப்படங்களும் களமிறங்க உள்ளன. அதன்படி போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த 'துணிவு' படம் வெளியாக உள்ளது. இதே போல தில்ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.‘

இப்படங்களின் பாடல்கள் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் இப்படங்களின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன்படி யுனைடெட் கிங்டம்மில் 'துணிவு', 'வாரிசு' படங்களுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படத்திற்கு அதிக புக்கிங் நடத்துள்ளது. அதன்படி ' வாரிசு' படத்திற்கு 3760 டிக்கெட்டுகளும், 'துணிவு' படத்திற்கு 925 டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT