சினிமா

கார்த்தியின் 25-வது படமான 'ஜப்பான்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

காமதேனு

நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இந்தப் படத்தின் பூஜை தொடங்கியது. இதனையடுத்து படத்தின் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் முக்கிய நடிகர்களுடன் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு சென்னையில் தொடங்க இருக்கும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அனு இம்மானுவேல் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஹெய்ஸ்ட் த்ரில்லர் கதையில் நடிகர் கார்த்தி இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கார்த்தியின் 25-வது படமான இது பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படம் தவிர்த்து நடிகர் கார்த்தி ‘சர்தார்2’, ‘பொன்னியின் செல்வன்2’, ‘கைதி2’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT