சினிமா

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ‘ராக்கெட்ரி’ டிரெய்லர்: மகிழ்ச்சியில் மாதவன்!

காமதேனு

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ராக்கெட்ரி - தி நம்பி விளைவு’. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. தமிழில் ’ராக்கெட்ரி - நம்பி விளைவு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஜூலை 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இதன் டிரெய்லர், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வெளியிடப்பட்டது. இதை நடிகர் மாதவன், நம்பி நாராயணன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்தனர்.

அப்போது ரசிகர்கள் மாதவனுடன் செ;ஃபி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர். இங்கு எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் மாதவன், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT