சினிமா

மத உணர்வுகளைப் புண்படுத்துகிறதா?: ராஷ்மிகா படத்துக்கு அரபு நாடுகளில் திடீர் தடை

காமதேனு

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படத்துக்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் ’சீதா ராமம்’. இதில் ராணுவ வீரராக துல்கர் நடித்துள்ளார். ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் இஸ்லாமிய பெண்ணாக ராஷ்மிகா நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இன்று வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தை பார்த்த அரபு நாடுகளின் தணிக்கைக் குழு, படத்துக்கு தடை விதித்துள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதால் தடை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பட விநியோகஸ்தர்கள், மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர்.

துல்கர் சல்மான் படங்களுக்கு அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த தடையால் அரபு நாடுகளில் இந்தப் படத்துக்கான பிசினஸ் பாதித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

SCROLL FOR NEXT