சினிமா

ஓடிடி-யில் வெளியாகிறது துல்கரின் ’சல்யூட்’

காமதேனு

துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ’சல்யூட்’, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

துல்கர் சல்மான் நடித்துள்ள மலையாளப் படம் ‘சல்யூட்’. இந்தி நடிகை டயா பெண்டி நாயகியாக நடித்திருக்கிறார். மனோஜ் கே.ஜெயன், லட்சுமி கோபாலசாமி, சாய்குமார், விஜய்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் துல்கர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.

இந்தப்படம் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை துல்கர் சல்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT