நடிகர் சித்தார்த்துடன் நடிகை அதிதிராவ்
நடிகர் சித்தார்த்துடன் நடிகை அதிதிராவ்  என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள்: நடிகை அதிதிராவ்
சினிமா

என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள்: நடிகை அதிதிராவ்

காமதேனு

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கவனம் கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு அதிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருக்கிறார் அதிதி என செய்திகள் வந்த வண்ணம் இருக்க, அதை உறுதிசெய்யும்படி அவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது, சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வது என உள்ளனர். இந்த நிலையில், நடிகை அதிதி ராவ்விடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சித்தார்த்துடன் அவரது ரிலேஷன்ஷிப் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘நீங்கள் அனைவரும் என்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து கவனம் குவிப்பதைக் காட்டிலும், என் படங்களையும் நடிப்பையும் கவனித்துப் பேசினால் மகிழ்ச்சியடைவேன். இப்போதைக்கு, படங்கள் நடிப்பதிலும் பல திறமையான இயக்குநர்களுடனும் வேலை பார்ப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். அதனால், என் தனிப்பட்ட வாழ்க்கயை விட என் வேலையை ரசிகர்கள் விமர்சிக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT