நடிகை திவ்யா சுரேஷ்
நடிகை திவ்யா சுரேஷ்  
சினிமா

ஸ்கூட்டர் விபத்தில் நடிகை காயம்

காமதேனு

ஸ்கூட்டர் விபத்தில் காயமடைந்த நடிகை திவ்யா சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல கன்னட நடிகை திவ்யா சுரேஷ். கன்னட பிக் பாஸில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. திடீர் பிரேக் போட்டதால், நிலைகுலைந்த திவ்யா சுரேஷ் கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் அவரது கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திவ்யா சுரேஷ், “சிறிய விபத்தில் சிக்கி இருக்கிறேன். இதனால் சில காலம் இன்ஸ்டாகிராம் பக்கம் வர இயலாது. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள். விரைவில் குணமடய பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்று கூறியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர், கடந்த டிசம்பர் மாதம் இரவு ஊரடங்கின்போது, பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்போது பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT