பப்பி லஹிரி
பப்பி லஹிரி  twitter
சினிமா

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

காமதேனு டீம்

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

இந்தியாவில் 1980 மற்றும் 1990-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர், இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து லஹிரி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மும்பை உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பப்பி லஹிரி உயிரிழந்தார்.

பப்பி லஹிரி, 1973-ம் ஆண்டு ‘நன்ஹா சிகாரி’ என்ற இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985-ம் ஆண்டு வெளியான, ‘பாடும் வானம்பாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT