சினிமா

நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

காமதேனு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றன. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அதுவும் மாபெரும் ஹிட்டானது. நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளார்.

இந்த நிலையில், அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர், ' மாஸ்டர்' படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் நடித்திருந்தார். நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதால் நடித்தாக அப்போது லோகேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் கேரக்டர் ரோலில் அவர் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT