சினிமா

‘அடுத்து அந்த ஹீரோவைத்தான் இயக்குகிறேன்' - உறுதிசெய்த லோகேஷ் கனகராஜ்

காமதேனு

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் ஷாம், சரத்குமார், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்

தமன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

’தளபதி 67 ‘ படத்தை அவர் இயக்குவது உறுதியான நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கமல் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.

SCROLL FOR NEXT