சினிமா

`அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'‍- அஜித் உடனான புகைப்படத்தை பகிர்ந்த தயாநிதி அழகிரி

காமதேனு

நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மு.க.அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி.

இயக்குநர் வினோத் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். இதற்காக வெள்ளை தாடியுடன் வலம் வரும் அஜித்தின் கெட்-அப் இணையத்தில் வைரலானது. தற்போது, மு.க.அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி, அஜித், ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு. அவர் நம் பக்கத்தில் இருந்தால் அந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என கூறியுள்ளார். அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவியும் உள்ளனர். இந்த படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT