சினிமா

விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காமதேனு

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், பத்மப்பிரியா, மிருணாளினி ரவி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

’கோப்ரா’ படத்தின் ரிலீஸ் ஏற்கெனவே பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த முறை இப்படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

SCROLL FOR NEXT