‘தளபதி 68’ பட பூஜையில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய்  
சினிமா

'தளபதி 68' படத்தில் விஜயுடன் இணைந்த பிக் பாஸ் பிரபலம்... ஜாக்பாட் வாய்ப்பு!

காமதேனு

'தளபதி 68' படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்கிறார் பிக் பாஸ் 7 பிரபலம். இவர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி68 பூஜை

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர்கள் மீனாட்சி, சிநேகா, லைலா, மோகன், பிரபுதேவா, ஜெயராம் என பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளும் நடனக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. இந்த நிலையில், டீஏஜிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற தகவலும் வெளியானது.

யுகேந்திரன்

இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடப்பதாக சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய பாடகரும், நடிகருமான யுகேந்திரன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸுக்கு வந்ததாக யுகேந்திரன் கூறி இருந்தார். இந்த நிலையில், 'தளபதி 68' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யுகேந்திரன் கமிட் ஆகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யுகேந்திரன் இதற்கு முன்னதாக விஜய்யுடன் சேர்ந்து 'திருப்பாச்சி' படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். 'தளபதி 68' படத்தை இயக்கும் வெங்கட் பிரபு, யுகேந்திரனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல் செய்யாதீங்க விஷால்... பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அதிர்ச்சி... ரஜினி படப்பிடிப்பில் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

புரட்டி போட்ட கனமழை... நிவாரண முகாம்களில் 18,729 பேர் தஞ்சம்!

பகீர்... குப்பைத் தொட்டிக்குள் மனித எலும்புக்கூடுகள்: கோவை மக்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT