இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா hindu கோப்பு படம்
சினிமா

கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் பாரதிராஜா!

காமதேனு

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா தொலைப்பேசி மூலம் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்திருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு கரோனா உருதியானதை இயக்குநர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "காலத்தின் நாயகர்களே விரைந்து வருக இருவரோடும்

பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன்.

'கலிங்கப்பட்டியின் சிங்கம்' தலைவர் வைகோ அவர்களும் என் 'தென்கிழக்குச்சீமை'இயக்குநர் பாரதிராஜா அவர்களும் தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு, எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம், மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு, கரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் மீண்டும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் பரிபூரண நலத்துடன் இன்று காலை மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார் என்ற செய்தியை அவரது உதவியாளர் சுரேஷ் மூலம் அறிந்தேன். மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT