பீஸ்ட் படத்தில்..
பீஸ்ட் படத்தில்.. 
சினிமா

’ஹலமித்தி ஹபீபோ...’: வெளியானது அசத்தல் அரபிக் குத்து

காமதேனு

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் இன்று வெளியானது.

நடிகர் விஜய் இப்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஜாக்கோ, ஜான் விஜய், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. விரைவில் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் ப்ரொமோ வீடியோவை, கடந்த 8-ம் தேதி படக்குழு வெளியிட்டிருந்தது.

அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இடம்பெற்ற இந்த வீடியோ வரவேற்பைப் பெற்றது. ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இந்த அரபிக் குத்து பாடல் காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்தப் பாடல் வெளியானது.

’மாம பித்தா பித்தாதே...’ என்ற தொடங்கும் இந்தப் பாடலை அனிருத்தும் ஜோனிதா காந்தியும் பாடியுள்ளனர். சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ஜானி மாஸ்டர் நடனக் காட்சிகள் அமைத்துள்ளார். இந்தப் பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT