சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

காமதேனு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வந்த பொன்னேரி தனி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தன்னுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகிகளோடு திரும்பிச் சென்றுவிட்டார்.

ஏ.ஆர். ரஹ்மான் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், “ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் புதுமண இணையரை வாழ்த்தினேன். அன்புக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது உயிரோட்டமான இசையால் எல்லைகளையும் தடைகளையும் கடந்து மேலும் பல நெஞ்சங்களை ஆற்றவும் இணைக்கவும் வாழ்த்துகிறேன்.” என ட்விட் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT