சினிமா

மீண்டும் லீக் ஆனது விஜய்யின் `வாரிசு’ புகைப்படம்

காமதேனு

விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார், விஜய். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர். குடும்பக் கதையை கொண்ட படம் என்பதால் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

ஏற்கெனவே இணையத்தில் கசிந்த வாரிசு புகைப்படங்கள்

தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடந்து வருகிறது. இப்போது விசாகப்பட்டினத்தில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில், வாரிசு படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது தமிழ்ப்படம் என்பதால் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

சமீபத்தில் கசிந்துள்ள வாரிசு புகைப்படம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இது படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இப்போதும் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில், நடிகர் விஜய் கோட், ஷூட் அணிந்து தொழிலாளர்களிடம் பேசுவது போல காட்சி இருக்கிறது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT