சினிமா

24 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் இயக்குநர் ராஜீவ் மேனன்

காமதேனு

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் மற்றொரு பிரலம் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி, சூரி, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘விடுதலை’. இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையைத் தழுவிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி வரும் நிலையில் சிறுமலை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் படக்குழு தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 1998-ம் ஆண்டு மலையாள படமான ‘ஹரிகிருஷ்ணன்ஸ்’-க்கு பிறகு ராஜீவ் மேனன் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் சண்டை காட்சிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து சண்டை பயிற்சியாளர்கள் வர வழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கள் மட்டும் தான் இன்னும் படமாக்கப்படவில்லை. சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் வந்ததும் ஒரே ஸ்ட்ரெட்ச்சில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டு விடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சண்டை காட்சிகள் குறித்து விசாரித்த போது, ‘முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இரண்டாவது பாகத்தில் தான் இந்த சண்டை காட்சிகள் என்பது இருக்கும். இந்த சண்டை காட்சி அதிரடியாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது’ என்கின்றனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT