நடிகை சோனா... 
சினிமா

ஆசைப்பட்டும் கல்யாணம் செய்துக்க முடியல... கலங்கும் அஜித் பட நடிகை!

காமதேனு

அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனா. பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது 'ஸ்மோக்' என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார்.

ஷார்ட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 'ஸ்மோக்' என்ற வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார்.

இது குறித்து பேசிய சோனா, “தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்தப் பிறகு கொஞ்சநாள் கழித்து சில காரணங்களால் நடிப்பை விட்டு ஒதுங்கி மலேசியா சென்றேன். பின்னர் மீண்டும் 'சிவப்பதிகாரம்' படம் மூலம் திரும்பி வந்தேன்.

சிவப்பதிகாரம்' படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்தேன். என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள். அது என்னுடைய தவறுதான். ஆனால் நானும் ஒரு சராசரி பெண் தான்.

ஸ்மோக் படக்குழு

ஒரு கட்டத்தில் என் மீதான கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் கூட நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

அரசியலை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அதில் ஈடுபடும் அளவிற்கு ஆர்வமில்லை.

2010ல் குமுதம் இதழுக்காக தேவி மணி சார் ஒரு கவர் ஸ்டோரி செய்தார். அது ஆரம்பித்து அது கிட்டத்தட்ட 20 வாரத்திற்கு மேல் சென்று வரவேற்பு பெற்றது. அப்போதுதான் பத்திரிகையாளர் தேவிமணி இதையே நீங்கள் திரைப்படமாக உருவாக்கினால் என்ன? என கேட்டார். அந்த கவர் ஸ்டோரியை புத்தகமாக உருவாக்கியபோது தான், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேனா என ஆச்சரியப்பட்டேன்.

இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் பார்க்கக்கூடிய படம் என்று பலரும் பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன்.

இது ஒரு இயக்குநராக கிடைத்த வாய்ப்பு என்பது சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையை சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன். 99% சதவீதம் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT