சிரஞ்சீவி, ஸ்ருதி ஹாசன்
சிரஞ்சீவி, ஸ்ருதி ஹாசன் 
சினிமா

மெகா ஸ்டார் ஜோடியானார் ஸ்ருதி ஹாசன்!

காமதேனு

நடிகை ஸ்ருதிஹாசன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமான இதை கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படம் இரண்டு பாகமாக உருவாக இருக்கிறது.

இதையடுத்து மூத்த தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பாலகிருஷ்ணாவின் 107வது படமான இதை, கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாகவும் அவர் நடிக்க இருக்கிறார். பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் அவருடைய 154 வது படத்தில், ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு, நடிகர் சிரஞ்சீவி இதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

SCROLL FOR NEXT