சினிமா

விஜய் மகனுக்கு ஜோடியா நடிக்கணும்... ஆசையைச் சொன்ன பிக் பாஸ் நடிகை!

காமதேனு

”விஜயுடன் இனி நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. அவருடன் இல்லை என்றாலும் அவரது மகனுடனாவது நடிக்க ஆசை” என பிக் பாஸ் புகழ் நடிகை ரவீனா பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

’பிக் பாஸ்’ ஏழாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார் நடிகை ரவீனா. நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ’ராட்சசன்’, ‘எனிமி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் அவரிடம் “விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதைக் கேட்டுப் பதறிப் போனார் நடிகை ரவீனா. “’என்னிடம் ஒரு பேட்டியில் ’எந்த நடிகரோடு கதாநாயகியாக நடிக்க ஆசை?’ எனக் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் விஜய் சாரோடு நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அது இனிமேல் நடக்குமா எனத் தெரியவில்லை. அவருடன் இல்லை என்றாலும் அவருடைய மகனுடனாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்றுதான் பேசியிருந்தேன். மற்றபடி சஞ்சய் இயக்கும் படத்தில் கதாநாயகி நான் என்று சொல்லவில்லை” என்று சொன்னார்.

விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் தான் ரவீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். பின்பு, ‘புலி’ படத்திலும் அவர் நடித்தார். இப்படி இருக்கையில் விஜய் மகனுடன் கதாநாயகியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இயக்குநராகும் ஜேசன் சஞ்சய் விஜய்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியும் படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

SCROLL FOR NEXT