நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு: இன்ஸ்டாவில் படம் வெளியீடு
சினிமா

பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு: இன்ஸ்டாவில் படம் வெளியீடு

காமதேனு

நடிகை குஷ்பு விபத்தில் சிக்கி முழங்காலில் அடிபட்டுள்ளது- இந்த நிலையில், காயத்துடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராமராஜன், சரத்குமார் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர் சி.யை காலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நடிப்பில் இருந்து ஒதுங்கிய குஷ்பு, தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு விபத்தில் சிக்கியுள்ளார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், " உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ​​ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும். இப்படி இருக்கும் நிலையில் என்னால் ஓய்வு எடுக்க முடியவில்லை. எனக்குரிய பணியை நான் முடிக்க முடிக்க வேண்டும் என்பதால் டெல்லிக்கு கிளம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT