நடிகை கீர்த்தி பாண்டியன்  
சினிமா

பற்றி எரிந்த கார்... பதைபதைக்கும் கீர்த்தி பாண்டியனின் ட்விட்!

காமதேனு

நடிகை கீர்த்தி பாண்டியனின் பக்கத்து வீட்டுக்காரருடைய கார் பற்றி எரிந்திருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தை டேக் செய்து அவர் பகிர்ந்துள்ள ட்விட் தற்போது வைரலாகி இருக்கிறது.

நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடி தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி பாண்டியனின் ‘கண்ணகி’ படமும் அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படமும் வெளியானது. இந்த நிலையில்தான், கீர்த்தி பாண்டியன் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கார் பற்றி எரிந்துள்ளது பற்றி பதைபதைக்கும் ட்விட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணகுமார் என்பவர் எல்க்ட்ரானிக் கார் ஒன்று வைத்திருக்கிறார். அது திடீரென பற்றி எரிந்திருக்கிறது. இதுபற்றி அதுகுறித்து சரவணகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், ’ஆறு வாரங்களுக்கு முன்பு 26 லட்ச ரூபாய் கொடுத்து நான் MG ZS EV என்ற எலக்ட்ரானிக் காரை வாங்கினேன். இதனை என் வீட்டின் பார்க்கிங்கில் காரை நிறுத்தியிருந்தபோது திடீரென அது பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த, என் அக்கம்பக்கத்தினரும், என் குடும்பத்தினரும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் உடனே வந்து 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதுகுறித்து நான் கார் நிறுவனத்திற்குத் தகவல் சொன்னேன். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை’ என அவர் அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறியுள்ளார்.

இந்த ட்விட்டை கீர்த்தி பாண்டியன் தனது டைம்லைனில் பகிர்ந்து, ‘சரவணகுமார் என் பக்கத்து வீட்டுக்காரர்தான். அவரது வீட்டில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருக்கிறார்கள். இந்த விபத்தில் யாருக்காவது அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன செய்வது? இது ஆபத்தான விஷயம். எனவே, அவரது மின்னஞ்சலுக்கு சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் பதில் சொல்லியே ஆகவேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என எம்ஜி நிறுவனத்தை டேக் செய்து தெரிவித்து இருக்கிறார். இந்த ட்விட் தற்போது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!

இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!

வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி... கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்!

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதிக்கு ஜன.1 வரை பக்தர்கள் வரவேண்டாம்- தேவஸ்தானம்

SCROLL FOR NEXT