நடிகர் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி 
சினிமா

#Election2024: வாக்குப்பதிவு செய்த நடிகர் விஜய்சேதுபதி!

காமதேனு

சென்னையில் நடிகர் விஜய்சேதுபதி தனது வாக்கினைப் பதிவு செய்தார். வரிசையில் நின்ற நேரத்தில் அவர் தனது ரசிகர்களுடன் உரையாடினார்.

நடிகர் விஜய்சேதுபதி சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வரிசையில் நின்று வாக்களித்த சமயத்தில் அவர் தனது ரசிகர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் .

காலை முதலே திரைப்பிரபலங்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். அடுத்தடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், வெற்றிமாறன் எனப் பலப் பிரபலங்களும் வாக்களித்தனர். “வாக்களிப்பதுதான் மரியாதை. அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல, நடிகர் சிவகார்த்திகேயனும், “இளைஞர்கள் சிந்தித்து மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். காலை வாக்களித்து முடித்தப் பின்பு, சென்னை மாநகராட்சி வைத்திருந்த ‘வாக்களித்து விட்டேன்’ என்ற சமூகவலைதள அடையாள அட்டையில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் விஜய்சேதுபதி.

’நான் பெருமை மிகு குடிமகன்’ என அதில் எழுதப்பட்டு இருந்தது. பின்பு, “அனைவரும் வாக்களிப்பது அவசியம்” என்று சொல்லி விட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார்.

SCROLL FOR NEXT