நடிகர் விஜய் 
சினிமா

'GOAT' படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்... ரசிகர்கள் குஷி!

காமதேனு

'GOAT' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பிடிஎஸ் புகைப்படத்தை தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்- இயக்குநர் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘GOAT' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக படக்குழு அமெரிக்கா சென்றது. அங்கு பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் படத்தின் மற்ற பணிகளும் வேகமெடுத்துள்ளது.

அடுத்த மாதம் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தயாரிப்பு தரப்பு புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதாவது, படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் அமர்ந்து மானிட்டரைப் பார்க்கும்படியான புகைப்படம்தான் அது.

இதனைப் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “‘GOAT' படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சார். எனக்குப் பிடித்த எல்லோரும் இங்கு இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, லைலா, மோகன், சிநேகா எனப் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

‘GOAT' படத்தின் விஎஃப்எக்ஸ் பணி...

செப்டம்பர் 5 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அடுத்து, தன்னுடைய 69வது படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

SCROLL FOR NEXT