'கில்லி’ படத்தில் 
சினிமா

#Ghilli Re-release: ‘படையப்பா’ சாதனையை முறியடித்த ‘கில்லி’... சில சுவாரஸ்ய தகவல்கள்!

காமதேனு

தரணி இயக்கத்தில் நடிகர்கள் விஜய்- த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் இப்போதுள்ள 2கே கிட்ஸூக்கும் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கிறது. விஜயின் துறுதுறு நடிப்பு, தங்கையுடன் வீட்டில் சேர்ந்து செய்யும் குறும்புத்தனம், கபடி என்றவுடன் வரும் பொறுப்பு, த்ரிஷாவுடன் காதல், பிரகாஷ்ராஜூடன் மோதல் என ரசிகர்களுக்குப் பிடித்த அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரியாக அமைந்து படம் ஹிட்டானது.

படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், வரும் ஏப்ரல் 20 அன்று படம் ரீ- ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ‘கில்லி’க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து வந்த சமயத்தில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை இந்தப் படம் கொடுத்தது. தெலுங்கில் மகேஷ் பாபு, பூமிகா நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘கில்லி’. தமிழ் தவிர இந்தக் கதை கன்னடம், ஒடியா, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆனது.

இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்- த்ரிஷா ஜோடி சேர்ந்தனர். படத்தில் பிரகாஷ் ராஜூக்கு பயந்து, குடும்பத்தைக் காப்பாற்ற ஊரை விட்டு வந்த பயந்த சுபாவம் கொண்ட தனலட்சுமியாக த்ரிஷா கலக்கி இருப்பார். இவரும் விஜயும் இணைந்து நடனமாடிய ‘அப்படிப்போடு...’ பாடல் இப்போதும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் இளசுகள் மத்தியில் ஹிட்தான்.

நடிகர் விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் உண்டு. அதனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் படமாக ’கில்லி’ அமைந்தது. இந்தப் படம் வெளியான நேரத்தில் கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளம் அல்லாத படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படமான எம்ஜிஆரின் ’அடிமை பெண்’ படத்தின் சாதனையை ’கில்லி’ முறியடித்தது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடியைத் தாண்டிய முதல் தமிழ் படம் ’கில்லி’ தான் என்கிறது சினிமா வர்த்தக வட்டாரம். ‘படையப்பா’ படத்தின் வசூல் சாதனையையும் இது தாண்டியது குறிப்பிடத்தக்கது.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, ‘கபடி...கபடி...’ என்று படத்தில் இடம்பெற்ற தீம் இசை 2010-ல் நடந்த ஆசிய விளையாட்டு கபடி இறுதிப் போட்டியின் போது இசைக்கப்பட்டது.

முத்துப்பாண்டியாக வில்லத்தனம் காட்டி மிரட்டி இருப்பார் நடிகர் பிரகாஷ்ராஜ். த்ரிஷாவிடம் ‘செல்லம்...செல்லம்...’ என அவர் பேசும் மாடுலேஷன் பயங்கர ஃபேமஸ். நிஜத்திலும் எல்லோரிடமும் பிரகாஷ்ராஜ் அப்படித்தான் பேசுவாராம். அந்த மாடுலேஷன் இயக்குநரைக் கவர அதையே படத்திலும் வைத்து விட்டார். படத்தில் த்ரிஷாவின் தந்தையாக வரும் நடிகர் வினோத் ராஜ், நடிகர் விக்ரமின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

SCROLL FOR NEXT