போண்டாமணி-விஜயகாந்த்
போண்டாமணி-விஜயகாந்த்  
சினிமா

போண்டாமணி குடும்பத்தின் மொத்த கடனையும் அடைத்த விஜயகாந்த்... வெளியானத் தகவல்!

காமதேனு

மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி கடனால் சிக்கித் தவித்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த் அவரது முழு கடனையும் அடைத்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போண்டாமணி குடும்பத்துக்கு விஜயகாந்த் உதவி...

நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது மறைவை ஒட்டி, பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேசமயத்தில் அவர் செய்த பல நல்ல விஷயங்களும் ரசிகர்களும் திரைத்துறையினரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். நடிகர் மீசை ராஜேந்திரன் போண்டாமணி மறைவின்போது அவரது குடும்பத்திற்கு பிரேமலதா சொல்படி, ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருந்தார். ஆனால், அதன் பிறகு போண்டாமணி மறைவையும் அவர் குடும்பம் கடனால் தவித்ததையும் கேள்விப்பட்ட கேப்டன் விஜயகாந்த் பொருளாதார உதவி செய்ய முன்வந்துள்ளார்.

போண்டாமணி-விஜயகாந்த்

போண்டாமணி குடும்பம் 12 லட்ச ரூபாய் கடனில் சிக்கித் தவித்துள்ளது. இந்தக் கடனை நடிகர் விஜயகாந்த் முழுவதுமாக அடைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட பிறருக்கு உதவ வேண்டும் என்ற குணத்தை மாற்றாமல் இருந்திருக்கிறார் கேப்டன் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது முழு கடனையும் அடைத்தவர் விஜயகாந்த்.

போண்டாமணிக்கு நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணம் செய்து வைத்தவரும் விஜயகாந்துதான். இதுமட்டுமல்லாமல், இன்று முன்னணியில் உள்ள பல நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

பி.எஃப் முன்பணம் இனி எடுக்க முடியாது... ஊழியர்கள் அதிர்ச்சி!

50,000 பேர் திரள்கிறார்கள்... சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்!

அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்!

அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்... வைரலாகும் விஜயகாந்த் வீடியோக்கள்!

SCROLL FOR NEXT