சித்தார்த்- அதிதி 
சினிமா

சித்தார்த் - அதிதி ராவ் திடீர் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்!

காமதேனு

நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் இன்று காலை தெலங்கானா மாநிலத்தில் அதிதி ராவ் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்- அதிதி

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த நிலையில், இருவரும் காதல் குறித்த செய்திகளைக் கண்டுக்கொள்ளாமல், தங்களது மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து காதலையும் உறுதி செய்தனர்.

சித்தார்த்தின் படங்களுக்கு அதிதி ஆதரவு கொடுத்து ஹார்ட்டீன் பறக்க விடுவது, அதிதியின் பிறந்தநாளுக்கு சித்தார்த் ஸ்பெஷலாக வாழ்த்துவதில் துவங்கி, ஒரே காரில் ஊர் சுற்றுகையில் மும்பை மீடியாக்களிடம் ஜோடியாக சிக்கியது என இருவரின் காதல் தருணங்களும் ரசிகர்களைக் கவர்ந்தது.

’எப்போது திருமணம்?’ எனப் பலரும் இவர்களிடம் நேரிடையாகவே நிகழ்ச்சிகளில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மழுப்பலாக பதில் சொல்லி தப்பித்து வந்த ஜோடி, இன்று தங்களது திருமணத்தை முடித்துள்ளனர்.

வனபர்த்தி மாவட்டத்தில் நடிகை அதிதி ராவ் குடும்பத்திற்கு சொந்தமாக உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சித்தார்த்- அதிதி

’மகாசமுத்திரம்’ தெலுங்குப் படத்தில் இந்த ஜோடி சேர்ந்து நடித்த சமயத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சித்தார்த்துக்கு கடந்த 2003ஆம் ஆண்டு மேக்னா என்பவருடன் திருமணம் முடிந்து விவாகரத்தானது. அதேபோல, அதிதிக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்து 2013ல் விவாகரத்தானது.

ஆக, இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்தான். இதனால், மீடியா வெளிச்சத்திற்குக் கூட வராமல் ரகசிய திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர். எப்படி இருந்தாலும், திருமண வாழ்வில் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளையும் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

SCROLL FOR NEXT