நடிகர் சாயாஜி ஷிண்டே
நடிகர் சாயாஜி ஷிண்டே 
சினிமா

நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த பிரபல நடிகர்... அவசரமாக நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை!

காமதேனு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சாய ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரன் இயக்கிய ’பாரதி’ திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கேரக்டரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. இப்படத்தில் பாரதியாராக மிக அற்புதமான நடிப்பை சாயாஜி ஷிண்டே வழங்கியதால் திரையுலகினரால் பாராட்டப்பட்டார்.

பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டே, தேவயானியுடன்.

இதன் பின் 'அழகி', 'பாபா', 'தூள்', 'அழகிய தமிழ் மகன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', ’பூவெல்லாம் உன் வாசம்’ ’ ’படிக்காதவன்’ ’வேட்டைக்காரன்’ ’வேலாயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார் சாயாஜி ஷிண்டே. தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த சாயாஜி ஷிண்டே, நாடக நடிகராக இருந்து திரையுலகில் நுழைந்தவர். நடிப்பு மட்டுமின்றி பசுமை ஆர்வலரான சாயாஜி ஷிண்டே கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

நடிகர் சாயாஜி ஷிண்டே

இந்த நிலையில் வீட்டில் இருந்த சாயாஜி ஷிண்டேவிற்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நடிகர் சாயாஜி ஷிண்டே

இதையடுத்து சதாராவில் உள்ள பிரதிபா மருத்துவமனையில் சாயாஜி ஷிண்டே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதயக்குழாய்களில் ஒன்று 99 சதவீதம் அடைப்பட்டுவிட்டதாகவும் , இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

SCROLL FOR NEXT