சமுத்திரகனி
சமுத்திரகனி 
சினிமா

சின்னப் படங்களுக்கு போராட வேண்டியுள்ளது... நடிகர் சமுத்திரக்கனி ஆதங்கம்!

காமதேனு

"அப்பா என்றாலே வேதியியல் மாற்றம் எனக்குள் நடக்கும். அப்பாக்களைப் பற்றிய கதை என்றாலே எமோஷனலாகி ல் ஆகிவிடுவேன்” என இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி பேசியுள்ளார்.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழாவில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, அப்பாக்கள் பற்றிய கதை என்றாலே தான் எமோஷனலாகி விடுவதாகப் பேசியுள்ளார்.

நிகழ்வில் பேசிய அவர், “அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

’ராம ராகவம்’ பட விழாவில்

'ராமம் ராகவம்' படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் சின்னப் படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியதாக உள்ளது. இப்படித்தான் இதற்கு முன்பு நான் நடித்த சில சிறிய பட்ஜெட் படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை” என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

SCROLL FOR NEXT