ரஜினிக்கு கோல்டன் விசா  
சினிமா

ரஜினிக்கு கோல்டன் விசா... ஐக்கிய அரபு அமீரகம் அளித்த கவுரவம்!

சந்திரசேகர்

'வேட்டையன்' படப்பிடிப்பு முடிந்த பிறகு துபாய் சென்றுள்ள ரஜினியை கவுரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.

'ஜெயிலர்' படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடிகர் ரஜினி நடித்து வந்தார். தொடர்ந்து பல மாதங்களாக படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ரஜினிக்கு, சமீபத்தில் அவருடையை பகுதிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். அதனால், சிறிது ஓய்வுக்காக ரஜினி, துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார்.

சமீபத்தில் லூலூ மால் உரிமையாளருடன், காரில் வலம் வரும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், துபாய் சென்றுள்ள ரஜினியை கவுரவிக்கும் விதமாக, கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை தமிழ் நடிகர்களான பார்த்திபன், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, த்ரிஷா ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ரஜினியும் இணைந்துள்ளார்.

கோல்டன் விசா பெறும் நடிகர் கமல்ஹாசன்

இந்த கோல்டன் விசாவானது, கடந்த 2019ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள், 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் கோல்டன் விசாக்களை வழங்கப்படுகிறது.

கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT