நடிகர் பிரபாஸ் 
சினிமா

திருமணத்திற்கு தயாரான பிரபாஸ்... குவியும் வாழ்த்துக்கள்!

காமதேனு

'என் வாழ்வில் ஸ்பெஷலான ஒரு நபர் நுழைந்திருக்கிறார். அது யார் என்பதை சீக்கிரம் சொல்கிறேன்’ என நடிகர் பிரபாஸ் புதிரான ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார்.

’ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ எனத் தொடர்ந்து இவர் நடித்த பான் இந்திய படங்கள் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. இப்போது பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார்.

’நாற்பது வயதைக் கடந்தும் சிங்கிளாக வலம் வரும் பிரபாஸூக்கு எப்போது திருமணம்?’ என்பது தான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக நீடித்து வருகிறது. இவருக்கும், அனுஷ்காவும் காதல், சீக்கிரம் திருமணம் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால், அதுகுறித்து இருவரும் சத்தம் காட்டாமல் இருந்தனர்.

இப்போது, பிரபாஸ் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று மீண்டும் திருமண பேச்சை கிளப்பியிருக்கிறது. ‘டார்லிங்ஸ்! என் வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷலான ஒருத்தர் நுழையப் போகிறார். என்ன விஷயம் என்று சீக்கிரம் சொல்கிறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று சொல்லி இருக்கிறார்.

இதைப் பார்த்த பலரும் பிரபாஸின் திருமணச் செய்தியா என்று கேள்வி எழுப்ப, இன்னும் சிலரோ ‘பிரபாஸ் சமீப வருடங்களாக தனது பர்சனல் வாழ்க்கைப் பற்றி பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அவர் மாறவும் மாட்டார். அதனால், இது ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கான புரோமோஷனாகவோ அல்லது புதிய படம் பற்றிய அறிவிப்பாகவோ இருக்கலாம்.

எல்லோரும் அவரது காதல் அல்லது திருமணம் குறித்தான விஷயம் தெரிய வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால், அதற்கு இன்னும் காலம் எடுக்கும்’ எனவும் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

சென்னையில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 27 டன் வெடிபொருட்கள்... துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுப்பு!

SCROLL FOR NEXT