சினிமா

`ஒரு வருடத்தில் ஐந்து தோல்வி படங்கள் கொடுப்பது பெரிய சாதனைதான்'- விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த நடிகர்!

காமதேனு

நடிகர் அசோக் செல்வன் தன் மீதான விமர்சனங்களுக்கு இணையத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வருடம் 'மன்மதலீலை’, ‘ஹாஸ்டல்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘வேழம்’, ‘நித்தம் ஒரு வானம்’ உள்ளிட்டப் படங்கள் அசோக்செல்வன் நடிப்பில் வெளியானது. இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில், ட்விட்டரில் சினிமா விமர்சகரும், இயக்குநருமான ‘ப்ளூ சட்டை’ மாறன், இந்த வருடம் அதிக தோல்வி படங்களைக் கொடுத்தவர் என நடிகர் அசோக்செல்வனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அசோக்செல்வன், ’குரைக்கிற நாய்களை தவிர்த்து விட்டு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். #SelfMade’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ’ப்ளூ சட்டை’ மாறன், ‘ட்வீட்ஸ் வழியே குரைப்பது எதற்கு உதவாது குழந்தை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு வருடத்தில் ஐந்து தோல்வி படங்கள் கொடுப்பது பெரிய சாதனைதான். வருங்காலத்தில் எந்தவொரு ஹீரோவும் இந்த சாதனையை முறியடிக்க முடியாது. உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். எண்ணிக்கையை விட தரம் முக்கியம்’ என பதிலளித்துள்ளார். அசோக்செல்வனுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT